பதினெண் கீழ்க்கணக்கு கட்ஜெட்


தமிழ் சங்கம் மருவிய காலகட்டத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தான் அகம் புறம் தவிர அறநூல்களும் உள்ளது. இவ்வகை அறநூல்கள் எந்த காலத்திலும் ஏற்புடையதாகும். இணைய வெளிகளில் சில தளங்களில் இந்த நூல்களைப படிக்கலாம் என்றபோதும் பரவலாக மக்கள் மத்தியில் சேர்வதில்லை. கூகிள் தளங்களில் இணைக்கும் விதமாக திருக்குறள் கட்ஜெட்கள் புழக்கத்தில் உள்ளன. இணைக்கப்பட்ட தளங்களில் ஒவ்வொரு பக்க திறப்பிலும் ஒவ்வொரு திருக்குறள் வந்து நிற்கும். ஆனால் மற்ற அறநூல்களுக்கு அவ்வாறு கட்ஜெட்கள் கிடைப்பதில்லை. அதனால் புது முயற்சியாக மற்ற நூல்கள் ஒவ்வொன்றாக கட்ஜெட்டாக்கம் செய்யப்படவுள்ளது.

முதல்கட்டமாக இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும், இணையேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில் அதன் ஒரு பாடலும், அதன் பொருளும் காட்டும். ஒவ்வொரு முறை refresh செய்யும் போதும் தானாக பாடல்கள் மாறும்.


வேண்டியவர்கள் இந்த முகவரிக்குச் சென்று வேண்டிய அளவுகளைக் கொடுத்து நிரலிகளை எடுத்துக்கொள்ளலாம்.உங்கள் வலை தளங்களில் அந்த நிரலிகளை சேர்த்து அந்த கட்ஜெட்டை இணைத்துக் கொள்ளலாம். இன்னும் சில காலங்களில் எல்லா பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் தானாக இந்த கஜெட்டினும் சேர்ந்துவிடும்.