அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் [FAQ]

மறுமொழித் திரட்டி என்றால் என்ன? இது எதற்காக?
தமிழில் பல தளங்கள் பெருகிவரும் வேளையில் ஆங்காங்கே நாம் இடும் மறுமொழிகள் அந்தந்த தளத்துடன் மட்டும் இருக்கும் அதனை ஒரு ஞாபகத்திற்கோ அல்லது தகவலுக்கோ நாம் தானியங்கியாக சேகரிக்கமுடிவதில்லை. சில சமயம் உபயோகரமான விவாதத்தில் போட்ட மறுமொழிகள் எந்தப் பக்கத்தில் போட்டோம் என்றே மறந்துவிடுவோம். அத்தகைய சூழலில் இந்த தானியங்கி மறுமொழித் திரட்டியை பதித்துக் கொண்டோமென்றால் உங்கள் மறுமொழிகள் தானாக சேமிக்கப்பட்டுவிடும்.

நான் எந்த தளத்தில் மறுமொழியிட்டாலும் சேகரிக்கப்படுமா?எத்தனை மாதத்திற்கு முன்னிருந்து மறுமொழிகள் திரட்டப்படும்?
முதலில் இது எப்படி திரட்டுகிறது என்கின்ற செயல் முறையை விளக்குகிறேன். இந்த எந்திரம் நாம் கொடுத்துள்ள சுமார் 7 ஆயிரம் தளங்களிலிருந்து கடைசியாக வெளியிடப்பட்டுள்ள மறுமொழிகளில் தலா 500 மட்டும் சேகரிக்கும். அதனால் திரட்டப்படும் சுமார் 3500000 மறுமொழிகளில் உங்கள் மறுமொழிகளை மட்டும் பிரித்து நாட்கள் வாரியாக உங்களுக்கு கொடுக்கும். அதனால் குறிப்பிட்ட மாதங்கள் என்ற கணக்கில் இல்லை ஆனால் அந்த தளத்தில் கடைசியாக வந்த 500 மறுமொழிகளுக்குள் இருக்க வேண்டும்.உங்களது பிளாக்கர் முகவரியுடன் நீங்கள் எந்த தளத்தில் மறுமொழிகள் பதிந்தாலும் திரட்டப்படும் வசதியுள்ளது. ஆனால் அந்த தளம் இந்த பட்டியலில் இருக்க வேண்டும். முடிந்தளவு தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது இந்தப் பட்டியலில் இல்லாத தமிழ் தளம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

அப்படியென்றால் அந்த தளத்தில் இன்று காட்டப்படும் எனது மறுமொழிகள் நாளை பார்க்கமுடியாதா?
ஆம், காரணம் லட்சக்கணக்கில் உள்ள மறுமொழிகளை எல்லாம் தினமும் பிரித்தேடுப்பதென்பது இந்த எந்திரத்தால் முடியாது. இது ஒரு தகவல்தளமில்லாத[Database] திரட்டியே அதனால் திரட்டப்பட்ட பழைய மறுமொழிகளை தன்னகத்தே வைத்துக் கொள்ளாது. இதற்கு மாற்றாக கூகிள் ரீடர் அல்லது ஏதாவது ரீடரைப் பயன்படுத்தி எல்லா மறுமொழியையும் சேமித்துக் கொள்ளலாம்.

எனது தளத்தின் மறுமொழியையும் இந்த எந்திரம் கணக்கில் எடுக்குமா?
இதன் தொகுதியில் இருக்கும் எல்லா தளத்தின் மறுமொழியையும் கட்டாயம் கணக்கில் கொள்ளும். உங்களது தளம் இதில் உள்ளதாவென்று சரிபார்த்துக் கொள்ளவும் அப்படியில்லை என்றால் தயங்காமல் தெரியப்படுத்துங்கள்.

பிளாக்ஸ்பாட் தளங்களில் மட்டும்தான் மறுமொழியைத் தேடுமா?
உங்கள் கேள்வியை இப்படி எடுத்துக் கொள்ளலாம், ப்ளாக்கரில் பதிவு செய்த தளங்கள் மட்டுமா? என்றால் கட்டாயம் ஆம்.ப்ளாக்கரில் பதிவு செய்து உதாரணத்திற்கு www.neechalkaran.com  என்று ஒருதளமிருந்தாலும் அதன் மறுமொழியும் திரட்டப்படும். அவையின்றி வேர்ட்பிரஸ் அல்லது வேறு தமிழ் தளங்களை தற்போதைக்கு இந்த எந்திரத்தில் இணைக்கவில்லை. மேலும் நீங்கள் http://www.blogger.com/profile/12133782203492631856 இப்படி தருவது ப்ளாக்கருக்கான அடையாள எண் தான் என்பது கூடுதல் செய்தி.

நான் ஒரு வாசகனைப் போல மற்ற தளங்களில் இடும் மறுமொழிகளை எனது தளத்தில் தொகுத்து இணைக்கமுடியுமா?
முன்பே கூறியது போல இந்த எந்திரம் மறுமொழிகளை சேமித்து வைக்காததால் இதை நேரடியாக உங்கள் தளத்தில் இணைத்தால் அதில் சில மறுமொழிகள் தவறலாம். அதனால் கூகிள் ரீடரின் வாயிலாக மறுமொழிகள் இழப்பின்றி உங்கள் தளத்தில் கட்டாயம் இணைக்கமுடியும்.

செல் பட்டனை அழுத்திய பின் பக்கம் திறக்க ஏன் மறுக்கிறது?
பொதுவாகவே ஒவ்வொரு முகவரியின் மறுமொழிகள் முழுதாக திரட்ட இரண்டு மூன்று நிமிடங்கள் எடுக்கும். ஆனால் சில சமயம் அதிகமான நபர்கள் தளத்தை பயன்படுத்தும் வேளையில் பக்கம் திறக்க மறுக்கலாம். சிறிது நேரம் கழித்து முயன்றுப்பார்க்கவும்.

நான் வலையுலகிற்குப் புதியவன் எனக்கு நேரடியாக எனது மறுமொழியை மட்டும் பிரித்து தரும் ஒரு நிரலியை தரமுடியுமா எனது தளத்தில் இணைக்குமாறு.?
கட்டாயம் முடியும் உங்கள் பிளாக்கர் கணக்கின் முகவரியுடன் எனது முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்  

இதில் வேறு ஏதாவது சுவாரசியமான விஷயம் உள்ளதா?
ஆம், உங்கள் நண்பர்களின் மறுமொழியை நீங்கள் பின் தொடரலாம். உங்களது மறுமொழியையும் மற்றவர்கள் பின் தொடரலாம். உங்கள் மறுமொழிகள் மட்டும் ஒரு தனிப் பதிவில் தானியங்கியாக சேமிக்கப்படலாம்